For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோயம்பேடு மார்க்கெட்டில் ரோஜா பூக்கள் வரத்து அதிகரிப்பு - காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு கட்டு ரூ.300க்கு விற்பனை!

09:02 AM Feb 13, 2024 IST | Web Editor
கோயம்பேடு மார்க்கெட்டில் ரோஜா பூக்கள் வரத்து அதிகரிப்பு   காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு கட்டு ரூ 300க்கு விற்பனை
Advertisement

காதலர் தினத்தை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் ரோஜா பூக்களின் விலை உயர்ந்தது. 

Advertisement

உலகமே காதலால் நிரம்பி உள்ளது. காதல் இல்லாமல் இங்கே சக மனித வாழ்வு என்பதே கேள்விக்குறிதான். மனிதர்களையும் தாண்டி அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான ஒன்றாக காதல் இருந்து வருகிறது. இந்நிலையில், காதலை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே அதற்கான தயாரிப்புகளில் காதலர்கள் மிகத் தீவிரமாக இறங்கிவிடுவர். பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்திற்கு பிப்ரவரி 7ம் தேதி முதலே ஒவ்வொரு தினமாக தொடங்கி கடைசியில் தங்களை காதலை வெளிப்படுத்திக் கொள்வர். இதனை காதல் வாரம் என்றே அழைக்கலாம்.

இதையும் படியுங்கள் ; விவசாயிகள் போராட்டம் - மார்ச் 12ம் தேதி வரை டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு.!

காதலர் தினத்தையொட்டி காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ரோஜாப்பூ மலர்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லெட், செல்போன் மற்றும் விதவிதமான பரிசு பொருட்களை வாங்கி தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பரிசளித்து மகிழ்வார்கள்.

தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட் செல்போன்கள் மூலம் வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வழியாக காதலர் தின குறுஞ்செய்தி, புகைப்படங்களை அனுப்பினாலும், ரோஜாப்பூ மற்றும் வாழ்த்து அட்டைகளை கொடுப்பது இப்போதும் மதிப்பு மிக்க ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் காதலர் தினத்தன்று ரோஜா பூக்களின் விறபனை களைகட்டும்.

இதனால், கோயம்பேடு மலர் சந்தைக்கு ஓசூர், கிருஷ்ணகிரி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வண்ண வண்ண ரோஜா பூக்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், 20 ரோஜா பூக்களை கொண்ட ஒரு கட்டுப் பூவினை ரூ.300 கோயம்பேடு மலர் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.

சிவப்பு ரோஜா ரூ.300, கலர் ரோஜா  ரூ. 250,  மற்ற வகை ரோஜாக்கள் ரூ. 300க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நாளை மறுநாள் முகுர்த்த நாளாக இருப்பதால் கோயம்பேடு மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ. 700, ஜாதி மல்லி ரூ. 500, சாமந்தி ரூ. 150க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்பேடு பேருந்து நிலையம் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாறியதன் காரணமாக பூக்களின் விற்பனை குறைந்து இருப்பதாகவும்,  செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து பூக்களை வாங்கிச் செல்ல வரும் வாடிக்கையாளர்கள் தற்போது வெகுவாக குறைந்து இருப்பதாகவும், இதனால் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு பூக்களின் விற்பனை குறைவாகவே நடைபெறுவதாக வியாபாரி வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement