Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆட்டோ ஓட்டுநரின் சரளமான ஆங்கில உச்சரிப்பால் அசந்து போன இங்கிலாந்துகாரர்!

09:38 PM Mar 09, 2024 IST | Web Editor
Advertisement

கேரளாவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இங்கிலாந்துகாரரிடம் ஆங்கிலத்தில் பேசும் வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

Advertisement

நம்மில் பலருக்கு ஆங்கில மொழி பேச தெரிந்தாலும் சரியாக இருக்குமோ என்ற அச்சத்தில் பிறரிடம் பேசத் தயங்குவோம். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இங்கிலாந்தை சேர்ந்த ஒருவரிடம் சரளமாக ஆங்கிலம் பேசி அவரிடம் பாராட்டைப் பெற்றுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த ஜாக்கி என்பவர் சமீபத்தில் கேரளாவுக்கு வந்துள்ளார். மதிய உணவிற்காக ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அவர் சென்ற ஹோட்டலில் ஆன்லைன்  பரிவர்த்தனை இல்லை. இந்நிலையில் கையில் காசு இல்லாததால் ஜாக்கி ஏடிஎம்-ஐ தேடி அலைந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த அஷ்ரத் என்ற ஆட்டோ ஓட்டுநர், ஜாக்கி அலைந்து திரிவதை பார்த்து அவருடன் பேசி உள்ளார். ஜாக்கி ஏடிஎம்மிற்கு செல்ல ஆங்கிலத்திலேயே அவருக்கு வழி கூறியுள்ளார். அஷ்ரத்தின் பேச்சை பார்த்து வியந்த ஜாக்கி இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து பார்க்கப்பட்டு வருகிறது.

Tags :
Auto DriverEnglishmaninstagramKeralaviral video
Advertisement
Next Article