For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்களை திறந்து வைக்க உள்ளார் பிரதமர் மோடி" - தென்னக ரயில்வே வணிக மேலாளர் கணேசன்

09:44 PM Feb 05, 2024 IST | Web Editor
 அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்களை திறந்து வைக்க உள்ளார் பிரதமர் மோடி    தென்னக ரயில்வே வணிக மேலாளர் கணேசன்
Advertisement
அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்களை விரைவில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்ட வணிக மேலாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.8.16 கோடி மதிப்பில் பயணிகள் காத்திருக்கும் அறை,  மாற்றுத்திறனாளிகளுக்கான லிப்ட்,  இரு, நான்கு சக்கர வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.  கடந்த ஆண்டு தொடங்கிய பணி, 50 சதவீதம் முடிவடைந்துள்ளது.

Advertisement

இப்பணிகளை தென்னக ரயில்வே மூத்த கோட்ட வணிக மேலாளர் கணேசன் தலைமையிலான அதிகாரிகள் இன்று (பிப்.05) நேரில் ஆய்வு செய்தனர்.  அதனுடன் ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்து ஆலோசனை மேற்கொண்டனர்.  இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இரயில்வே மூத்த கோட்ட வணிக மேலாளாளர் கணேஷ் கூறியதாவது:

இதையும் படியுங்கள்:  காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பதிவிட்ட புகைப்படங்கள்…. இணையத்தில் வைரல்…

"அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மதுரை கோட்டத்திற்குட்பட்ட 12 ரயில் நிலையங்களில் வளர்ச்சி பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.   இதில் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் மட்டும் ரூ.8.16 கோடி மதிப்பில் பயணிகள் காத்திருக்கும் அறைகள், இரண்டு இடங்களில் லிஃப்ட் வசதி, நவீன வசதியுடன் சுகாரதார வளாகம், வாகன பாதுகாப்பகம், வாட்டர் கூலர்ஸ் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.  கடந்த செப்டம்பர் மாதம் துவங்கிய இப்பணியானது தற்போது 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

வருகின்ற மார்ச் 31-ம் தேதிக்குள் முழுவதுமாக பணிகள் நிறைவடையும்.  அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்சிங் மூலம் இந்த வசதிகளை பயணிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்.  அதற்கான விழா கலாச்சார நிகழ்ச்சிகளாக பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  அதனை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான வசதிகள் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement