For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருமயம் கோட்டை பைரவர் ஆலயத்தில் அமித்ஷா தரிசனம்!

06:03 PM May 30, 2024 IST | Web Editor
திருமயம் கோட்டை பைரவர் ஆலயத்தில் அமித்ஷா தரிசனம்
Advertisement

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (மே 30) புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

Advertisement

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 7வது மற்றும் கடைசி கட்டத் தேர்தல் ஜுன் 1-ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் மற்றொரு தொகுதியான வாரணாசி தொகுதியிலும் ஜுன் 1-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக இன்று (மே 30) தமிழ்நாடு வருகிறார். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழ்நாடு வருகை புரிந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து இன்று மதியம் தனி விமானத்தில் புறப்பட்டு, திருச்சி விமான நிலையத்திற்குப் பிற்பகல் 3 மணிக்கு வருகை புரிந்தார். அதன் பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை கானாடுகாத்தானில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை அடைந்தார்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டை திருமயத்தில் திருமயம் கோட்டை சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை புரிந்து வழிபாடு செய்தார். அதனைத் தொடர்ந்து பழமை வாய்ந்த ராஜராஜேஸ்வரி சத்தியகிரீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.

இந்நிலையில் திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் மத்திய அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். அப்போது கோட்டை பைரவர் கோயில் அருகே காத்திருந்த பாஜக தொண்டர்கள் அமித் ஷாவைக் கண்டதும் ஆரவாரம் செய்தனர். அதன் பின்னர் அங்கிருந்து ஆந்திராவுக்கு செல்ல இருக்கிறார். 

Tags :
Advertisement