”SIR மீதான அமித்ஷாவின் முழு கவனமே டெல்லி கார் வெடிப்பிற்கு காரணம்” - வேல்முருகன் குற்றச்சாட்டு..!
அமித்ஷா பாதுகாப்பு பணியை தீவிர படுத்தாமல் SIR விவகாரத்தில் முழு கவனம் செலுத்திய தால் தான் டெல்லியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது என்று தவாக கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
07:31 PM Nov 11, 2025 IST
|
Web Editor
Advertisement
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
Advertisement
”வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமானது ஏற்புடையது அல்ல. அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். வட மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வரும் மக்கள் தமிழ்நாட்டில் யார் தலைவர்களாக வரவேண்டும் எனத் தீர்மானிக்க கூடாது. தமிழ்நாட்டில் உள்ள பூர்வகுடி மக்களின் இட ஒதுக்கீட்டை வட மாநில மக்கள் அபகரித்து வருகின்றனர்.
டெல்லியில் நடைபெற்ற கார் வெடிப்புக்கு பிரதமர் மோடி, அமித்ஷாவின் பாதுகாப்பு குறைபாடு தான் காரணம். இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியை தீவிர படுத்தாமல் SIR விவகாரத்தில் அமித்ஷா முழு கவனம் செலுத்திய காரணத்தால் தான் டெல்லியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது”
எனத் தெரிவித்தார்.
Next Article