தென்காசியில் நாளை மறுநாள் நடைபெற இருந்த அமித்ஷாவின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி திடீர் ரத்து!
தென்காசியில் நாளை மறுநாள் நடைபெற இருந்த அமித்ஷாவின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி 2 வது முறையாக ரத்து செய்யபட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு இன்னும் 7 நாட்களே இருக்கின்றன. இந்நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் வேட்பாளர்கள் ஆதரித்து தீவிர பரப்புரை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் பிரதமர் மோடி தொடர் பரப்புரை செய்து வருகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை நெல்லை, கோவையில் பரப்புரை செய்கிறார்.
இதையும் படியுங்கள் : ஹர்திக் பாண்டியாவிடம் ரூ.4.3 கோடி மோசடி செய்ததாக அவரின் சகோதரர் கைது!
இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழ்நாட்டின் மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் மாலை தென்காசிக்கு வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் வருகைக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தென்காசி மாவட்ட பாஜகவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தென்காசி மாவட்டத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரச்சாரத்திற்காக அமித்ஷா வர உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு சில காரணங்களுக்காக பிரச்சார பயணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக தற்போது பிரச்சார பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.