For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சந்திரயான்-3 குழுவுக்கு அமெரிக்காவின் உயரிய விருது!

11:51 AM Apr 10, 2024 IST | Web Editor
சந்திரயான் 3 குழுவுக்கு அமெரிக்காவின் உயரிய விருது
Advertisement

இந்தியாவின் சந்திரயான்- 3  குழுவுக்கு  அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக்கான 2024 ஜான் எல்.ஜாக் ஸ்விகர்ட் ஜூனியர் விருது அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதில் உள்ள விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் 15 நாட்கள் ஆய்வு செய்த நிலையில், நிலவில் இரவு தொடங்கியதால் அணைத்து வைக்கப்பட்டன. நிலவின் மீண்டும் பகல் தொடங்கிய போது, விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். எனினும், அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

நாசாவின் விண்கலம் அனுப்பிய லேசர் சிக்னலுக்கு, விக்ரம் லேண்டரில் இருந்து பிரதிபலிப்பு சிக்னல் வந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் மூலம், தென் துருவத்தில் இடத்தை குறிப்பிடும் அடையாளமாக விக்ரம் லேண்டர் மாறியுள்ளது. அதில் உள்ள லேசர் கருவியான எல்.ஆர்.ஏ. 10 ஆண்டுகள் வரை செயல்படக் கூடியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் 3 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

ஜான் எல்.'ஜேக் ஸ்விகெர்ட் ஜூனியர் விருதை 'இஸ்ரோ' சார்பில் ஹூஸ்டன் நகரில் உள்ள இந்திய துணை தூதர் டி.சி.மஞ்சுநாத் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், அமெரிக்காவில் கொலரோடாவில் வருடாந்திர விண்வெளி கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், விண்வெளி ஆராய்ச்சிக்காக, சந்திரயான் 3 திட்ட குழுவுக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த ஜான் எல்.'ஜேக் ஸ்விகெர்ட் ஜூனியர் விருது நேற்று வழங்கப்பட்டது. அந்த விருதை 'இஸ்ரோ' சார்பில் ஹூஸ்டன் நகரில் உள்ள இந்திய துணை தூதர் டி.சி.மஞ்சுநாத் பெற்றுக்கொண்டார். இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement