அமெரிக்கா தனது இறையாண்மையை இழந்து விட்டது - மம்தானி வெற்றியையடுத்து டிரம்ப் பேச்சு...!
அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்று நியூயார்க். இந்த நகரத்தின் மேயருக்கான தேர்தல் செவ்வாயன்று நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஆண்ட்ரூ குவோமோ, குடியரசுக் கட்சி சார்பில் கர்டிஸ் சில்வா மற்றும் இந்திய வம்சாவளி அமெரிக்கரான ஸோரான் மம்தானி ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் ஸோரான் மம்தானி வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் இன்று மியாமியில் நடந்த அமெரிக்க வணிக மன்றத்தில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப்,
"நவம்பர் 5, 2024 அன்று, அமெரிக்க மக்கள் எங்கள் அரசாங்கத்தை உரிமை கொண்டாடினர். நாங்கள் எங்கள் இறையாண்மையை மீட்டெடுத்தோம். நேற்று இரவு நியூயார்க்கில் சிறிது இறையாண்மையை இழந்தோம், ஆனால் அதை நாங்கள் கவனித்துக்கொள்வோம். நியூயார்க்கிற்கான ஜனநாயகக் கட்சித் தலைவரின் தொலைநோக்குப் பார்வை கட்சியின் பான்-அமெரிக்கா திட்டத்தை பிரதிபலிக்கிறது. ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்காவிற்கு என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதைப் பார்க்க விரும்பினால், நேற்று நியூயார்க்கில் நடந்த தேர்தலின் முடிவைப் பாருங்கள், அங்கு அவர்களின் கட்சி நாட்டின் மிகப்பெரிய நகரத்தின் மேயராக ஒரு கம்யூனிஸ்ட்டை நியமித்ததுள்ளனர்.
நான் பல வருடங்களாக எச்சரித்தது போல, நமது எதிரிகள் அமெரிக்காவை ஒரு கம்யூனிஸ்ட் கியூபாவாகவும், ஒரு சோசலிச வெனிசுலாவாகவும் மாற்றுவதில் உறுதியாக உள்ளனர். மம்தானியின் ஆட்சியின் கீழ் நியூயார்க் "கம்யூனிஸ்டாக" மாறும்போது, நியூயார்க் மக்கள் புளோரிடாவிற்கு தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்” என்றார். மேலும் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட மம்தானியின் வெற்றி உரையை "மிகவும் கோபமான" உரை என்று குறிப்பிட்டார்.