"நாட்டை மேம்படுத்த அம்பேத்கரின் கொள்கை பாதைகள் மேலும் ஒளிர செய்யும்" - பிரதமர் நரேந்திர மோடி!
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
11:41 AM Dec 06, 2025 IST
|
Web Editor
Advertisement
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் அவரது திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
Advertisement
இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "மகா பரிநிர்வாண் தினமான இன்று டாக்டர் அம்பேத்கரை நினைவு கொள்வோம். அவரின் தொலைநோக்குத் தலைமைத்துவமும், நீதி, சமத்துவம் மற்றும் அரசியலமைப்பு ரீதியான உறுதிப்பாடும் நமது தேசிய பயணத்தைத் தொடர்ந்து வழிநடத்துகின்றன. நாட்டை மேம்படுத்த அம்பேத்கரின் கொள்கை பாதைகள் மேலும் ஒளிர செய்யும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Article