ஆனந்த் தெல்தும்ப்டேவின் "முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர்" - நூல் அறிமுகம்
மனித உரிமை செயல்பாட்டாளரான ஆனந்த் தெல்தும்ப்டேவின் “முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர்” நூல் பற்றிய அறிமுகத்தை காணலாம்.
வெகுஜன அரசியல் களத்தில் செயல்படும் தலைவரை தன்னகத்தே ஈர்த்துக் கொள்ள ஒவ்வொருவரும் செயல்படுவது அரசியலில் சாதாரண விஷயம்தான். அதே நேரத்தில் அந்த தலைவரின் மறைவிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவர் சொன்னதாக கட்டமைக்கப்படும் கதைகளை புதிய தலைமுறையினர் பகுத்து ஆய்வது மிக அரிதாகவே நடக்கிறது.
அந்த வகையில் இந்திய அரசியல் களத்தில் அம்பேத்கர் குறித்து அவர் சொல்லாத அல்லது குறிப்பிட்ட பொருளில் அவர் சொல்லாத பல விடயங்கள் இன்றைய சமகால அரசியலில் விவாதப் பொருளாகியுள்ளன. அதுபோல முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர் பல விமர்சனங்களை முன்வைத்தார் என அவரது பெயரிலேயே இன்றைய பல கட்டுக்கதைகள் உலா வருகின்றன. அது குறித்து விரிவாக அலசுகிறது இந்த நூல்.
இந்த நூலை பிரபலாக அறியப்பட்ட பேராசிரியரான ஆனந்த் தெல்தும்ப்டே எழுதியுள்ளார். ஆனந்த் தெல்தும்ப்டே Economic and Political Weekly, Mainstream மற்றும் Frontier போன்ற முன்னணி பத்திரிகைகளில் எழுதியுள்ளார். சாதியம், தலித் அரசியல் சார்ந்த பல்வேறு புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். பீமா கொரோகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர் தற்போது பிணையில் உள்ளார். இவரது மனைவியான ரமா தெல்தும்ப்டே அம்பேத்கரின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
-ச.அகமது, நியூஸ் 7 தமிழ்