அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா தொடக்கம்… மாஸ் எண்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவிற்கு தவெக தலைவர் விஜய் வருகை தந்துள்ளார்.
சட்ட மாமேதை, புரட்சியாளர் அம்பேத்கரின் 68ம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிச. 6) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை நத்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழா அரங்கிற்கு தவெக தலைவர் விஜய் வருகை தந்துள்ளார். நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குள் நுழையும் போது சுற்றியிருந்த மக்களை நோக்கி கையசைத்தார்.
பின்னர், அரங்கிற்குள் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை முன், அமர்ந்து செல்பீ எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது விழா தொடங்கியுள்ளது, இந்த நூல் வெளியீட்டு விழா மேடைக்கு வருகை தந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சற்றுநேரத்தில் அம்பேத்கர் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார். அரசியல் ஆர்வலர்கள், அரசியல் விமர்சனங்கள் மற்றும் தவெக தொண்டர்கள் பலரும் பல தொலைக்காட்சி வழியாக புத்தக வெளியீட்டு விழாவை காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், கட்சி துவங்கி விஜய் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். இந்நிலையில், தவெக கட்சியின் மாநாட்டுக்கு பிறகு, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் விஜயின் இரண்டாவது மேடையில் என்ன செய்ய போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.