For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விருந்தினர்களுக்காக 100-க்கும் மேற்பட்ட தனியார் விமானங்கள் - களைகட்டிய அம்பானி வீட்டுத் திருமணம்!

12:58 PM Jul 11, 2024 IST | Web Editor
விருந்தினர்களுக்காக 100 க்கும் மேற்பட்ட தனியார் விமானங்கள்   களைகட்டிய அம்பானி வீட்டுத் திருமணம்
Advertisement

திருமணத்திற்கு வரும் விருந்தினர்களை அழைத்துச் செல்ல 3 ஃபால்கன் -2000 ஜெட்டுகள் மற்றும் 100 தனியார் ஜெட்டுகளை அம்பானி குடும்பத்தினர் வாடகைக்கு எடுத்துள்ளனர்.

Advertisement

உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் நாளை (ஜூலை 12) மும்பையில் நடைபெறவுள்ளது. இந்த திருமண விழாவிற்கு வரும் விருந்தினர்களை அழைத்து செல்ல 3 பால்கன் -2000 ஜெட் விமானங்களை அம்பானி குடும்பத்தினர் வாடகைக்கு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த செய்தியினை ஏர் சார்ட்டர் நிறுவனமான, கிளப் ஒன் ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜன் மெஹ்ரா தெரிவித்துள்ளார். திருமண விருந்தினர்களை அழைத்துச் செல்ல தனது நிறுவனத்தின் மூன்று ஃபால்கன்-2000 ஜெட் விமானங்களை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், மேலும் 100க்கும் மேற்பட்ட தனியார் விமானங்களும் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

அம்பானி இல்லத் திருமண விழாவினை மறக்க முடியாத விழாவாக ஆக்குவதற்காக ஏகப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதில் இதுவும் ஒன்று. உணவு, தங்குமிடம் என அனைத்தும் மிகப் பிரம்மாண்டமாக தயார் செய்யப்பட்டு வருகின்றன.

Tags :
Advertisement