இந்தியாவின் மொத்த GDPயில் 10% வைத்திருக்கும் அம்பானி குடும்பம்!
பார்க்லேஸ்-ஹுருன் இந்தியாவின் சர்வேபடி, அதிக சொத்து உள்ள குடும்பத்தின் பட்டியலில் அம்பானி குடும்பம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியா பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் குடும்பம் உட்பட மூன்று குடும்பங்கள் திரட்டியுள்ள சொத்துக்களின் மொத்த மதிப்பு என்பது சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு(GDP) இணையானது என தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள பார்க்லேஸ் வங்கி, இந்தியத் தனியார் நிறுவனங்களின் வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, முகேஷ் அம்பானி தலைமையில் அம்பானி குடும்ப நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ.2,575,100 கோடி. இரண்டாவது இடத்தில் இருக்கும் பஜாஜ் குடும்பம். இவர்கள் நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ.712,700 கோடி. மூன்றாவதாக பிர்லா குடும்பம், இவர்களின் ஆதித்ய பிர்லா குழுமத்தின் சந்தை மதிப்பு என்பது ரூ.538,500 கோடி.
உலோகங்கள் மற்றும் சுரங்க தொழிலில் ஈடுபட்டு வரும் பிர்லா குழுமம் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. இவர்கள் மூவர் மட்டுமின்றி இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு பல குடும்பங்கள் தங்கள் பங்களிப்பை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.
அதில் ஒருவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா. இவர்கள் நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 430,600 கோடி. இவர்களுடன், ரூ 345,200 கோடி மதிப்புடன் மஹிந்திரா குடும்பம், ரூ.257,000 கோடியுடன் பிரேம்ஜி குடும்பம், ராஜீவ் சிங் குடும்பம் மற்றும் முருகப்பா குடும்பம் என பலர் தங்கள் பங்களிப்பை அளித்து வருகின்றனர்.