Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு பிந்தைய கொண்டாட்டங்கள் - எங்கு தெரியுமா?

12:29 PM Jul 25, 2024 IST | Web Editor
Advertisement

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு பிந்தைய கொண்டாட்டத்திற்காக லண்டனில் உள்ள 7 ஸ்டார் ஸ்டோக் பார்க் ஹோட்டலை முகேஷ் அம்பானி முன்பதிவு செய்துள்ளார்.

Advertisement

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளரும், இந்திய தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது நீண்ட நாள் காதலியான ராதிகா மெர்ச்சண்டை கடந்த 12ஆம் தேதி கரம் பிடித்தார். இவர்களுடைய திருமணம் உலகளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.மேலும், இந்த திருமணத்திற்கு ரூ.5000 கோடி வரை செலவு செய்துள்ளதாக தகவல்களும் வெளிவருகின்றன.

இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்றனர்.

இதையும் படியுங்கள் : “புதிய வருமான வரி விதிப்பு முறையை தோ்வு செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு” – நேரடி வரிகள் வாரியத் தலைவா்!

முன்னதாக, கடந்த 2023 -ம் ஆண்டு டிசம்பர் 29 மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர், மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லமான அன்டில்லாவில் குஜராத் மாநில பாரம்பரியப்படி நிச்சயதார்த்த விருந்து நடைபெற்றது. மேலும்,2024ம் ஆண்டு மார்ச் 1 முதல் 3-ஆம் தேதி வரை குஜராத்தின் ஜாம்நகரில் திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 29ம் தேதி சொகுசு கப்பலில் பேச்சிலர் பார்ட்டி நடைபெற்றது. மேலும், திருமணத்திற்கு 2 நாட்களுக்கு முன் இசை நிகழ்ச்சி, ஹல்தி கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

தற்போது, திருமணத்திற்கு பிந்தைய கொண்டாட்டத்திற்காக லண்டனில் உள்ள 7 ஸ்டார் ஸ்டோக் பார்க் ஹோட்டலை அடுத்த இரண்டு மாதங்களுக்கு முகேஷ் அம்பானி முன்பதிவு செய்துள்ளார். இந்த திருமணத்திற்கு பிந்தைய கொண்டாட்டம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டத்தில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, திருமணத்திற்குப் பிந்தைய கொண்டாட்டங்களில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் கலந்துகொள்வார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
7-star London hotelambanianantambaniAnantRadhikaWeddingMarriagepost-wedding festivtiesradhikamerchant
Advertisement
Next Article