ஓ.டி.டி.யில் வெளியானது 'அமரன்' - ரசிகர்கள் உற்சாகம்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் ஓ.டி.டி.யில் இன்று வெளியாகியுள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் ' அமரன் ' . உலக நாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.50 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாரிக்கப்பட்டது . இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார் . மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படத்தில் இருவரும் எதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியது அதிகம் பாராட்டப்பட்டது.
இப்படம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்த நிலையில், அமரன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் வாங்கிய நிலையில், திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் போதே ஓ.டி.டி.தளத்தில் இன்று வெளியாகி உள்ளது .
ஓடிடி தளத்தில் திரைப்படங்கள் பார்ப்பதற்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில், 'அமரன்' திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆனதால் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.