For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமரன் திரைப்படம் வெளியாகும் முன்பே வசூல் சாதனை!

01:43 PM Oct 27, 2024 IST | Web Editor
அமரன் திரைப்படம் வெளியாகும் முன்பே வசூல் சாதனை
Advertisement

சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படம் வரும் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படம் ரிலீசுக்கு முன்பே சாதனையை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிறப்பாக உருவாகி உள்ள திரைப்படம் அமரன் .

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் , சாய்பல்லவி , ஸ்ரீ , உமர் , உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி உள்ள இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படம் ரிலீஸுக்கு முன்பே தரமான சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெளிநாடுகளில் ‘அமரன்’ திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியதை அடுத்து, இதுவரை ₹75 லட்சத்திற்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement