For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#AlzarriJoseph | கேப்டனுடன் வாக்குவாதம் - West Indies வேகப்பந்து வீச்சாளர் வெளியேற்றம்!

05:30 PM Nov 07, 2024 IST | Web Editor
 alzarrijoseph   கேப்டனுடன் வாக்குவாதம்   west indies வேகப்பந்து வீச்சாளர் வெளியேற்றம்
Advertisement

கேப்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மேற்கிந்திய தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

இங்கிலாந்து - மேற்கிந்திய தீவு அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பில் சால்ட் 74 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 43 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றியது. பிரண்டன் கிங் 102 ரன்களும், கீசி கார்ட்டி 128 ரன்களும் எடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியில் வேகப்பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப் 10 ஓவர்கள் பந்துவீசி ஒரு மெய்டனுடன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலாவது இன்னிங்ஸில் 4 வது ஓவரின் போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோர்டன் காக்ஸ் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது அல்ஜாரி ஜோசப் பவுலிங் செய்யவந்தபோது இரண்டு பேர் ஸ்லிபில் இருந்தனர். அல்ஜாரி ஜோசப் முதல் பந்தை வெளியே வீசினார். பேட்டர் அதை அடிக்கவில்லை.

https://twitter.com/CricketopiaCom/status/1854353930408608194

அடுத்த பந்தின் போது ஸ்லிப் இருந்த வீரரை பாய்ண்ட் திசையில் நிற்க வைத்துள்ளார் கேப்டன் கோப். இதனால், கேப்டனுக்கும், அல்ஜாரி ஜோசப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அந்த ஓவரை மெய்டன் ஓவராக வீசினார். பீல்டிங் செட் செய்வது குறித்து கேப்டன் ஷாய் கோப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அல்ஜாரி ஜோசப் எதுவும் தெரிவிக்காததால் பாதியிலேயே மைதானத்தைவிட்டு வெளியேறினார். பயிற்சியாளர் டேரன் ஷமி பவுண்டரி எல்லையில் இருந்து குரல் கொடுத்த போதும், அல்ஜாரி ஜோசப் கண்டுகொள்ளாமல் வெளியே சென்றார்.

அல்ஜாரி ஜோசப் மைதானத்தை விட்டு வெளியேறியதால் மேற்கிந்திய தீவுகள் அணியினர் மாற்றுவீரர் யாரும் களமிறங்க முடியாத சூழலால் அடுத்த ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணியினர் 10 வீரர்களுடன் விளையாடவேண்டிய கட்டாயத்தில் விளையாடினர். அதன்பின்னர் மீண்டும் களத்திற்கு வந்த அல்ஜாரி ஜோசப் பத்து ஓவர்கள் பந்துவீசி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனால், பார்வையாளர்கள், நடுவர்கள் மத்தியில் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Tags :
Advertisement