Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி: 90’s திண்பண்டங்களை பகிர்ந்து மகிழ்ச்சி!

08:06 AM Jan 16, 2024 IST | Web Editor
Advertisement

கோவை மன்ப உல் உலூம் பள்ளியில் கடந்த 1993 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் பழையவற்றை நினைவு கூறும் விதமாக 90களில் விற்கப்பட்ட திண்பண்டங்களை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Advertisement

கோவை கோட்டை மேடு பகுதியில் பழமை வாய்ந்த பள்ளியாக மன்ப உல் உலூம் பள்ளி
செயல்பட்டு வருகிறது.  இந்த பள்ளியில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் 1993 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி போத்தனூர் சாலையில் உள்ள ஆனந்தம் மகாலில் நடைபெற்றது.

30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே இடத்தில் சந்தித்த மாணவர்கள் கட்டித்தழுவி
தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.  தொடர்ந்து மாணவர்கள் மேடையில் ஏறி, முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் வகுப்பறையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அசைபோட்டு மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பழைய விளையாட்டுகளை நினைவு படுத்தும் விதமாக
பம்பரம், எறிபந்து போன்ற விளையாட்டுகளை காட்சிப்படுத்தியும், மாணவர்களே
விளையாடியும் மகிழ்ந்தனர்.  அதே போல நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பழைய நினைவுகளை நினைவுபடுத்தும் விதமாக  பொரி உருண்டை,  சீடை,  நெல்லிக்காய்,  கமர்க்கட்டு,  தேன் மிட்டாய்,  கடலை மிட்டாய்,  ஆரஞ்சு மிட்டாய்,  சர்க்கரை மிட்டாய் போன்றவற்றை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியின் நடுவே உடன் படித்த நண்பர்கள் சிலர் மறைந்த நிலையில் அவர்களது
படத்திற்கு மாணவர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். இ ந்த நிகழ்ச்சியை 93 ஆம் ஆண்டு மாணவர்கள் சதக்கத்துல்லா ,எஸ்.ஆர்.அப்பாஸ்,  கரும்புகடை சாதிக்,  மலர் அப்பாஸ், பாரூக்,  சிக்னல் ரபி,  ஜப்பான் இஸ்மாயில்,  சாலி,  உமர்ஷா,  லேனா இப்ராஹீம்,  புக் இதாயத்துல்லா,  எக்ஸ்போ உபைது ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Tags :
90s SnacksAlumini MeetcovaiManbaul Uloom SchoolReunionSchoolSchool Re Union
Advertisement
Next Article