For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“மணிரத்னம், கமல்ஹாசனுடன் சேர்ந்ததுதான் எனக்கு thug moment” - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்!

தக் லைஃப் படக்குழுவின் செய்தியாளர் சந்திப்பு...
03:19 PM Apr 18, 2025 IST | Web Editor
“மணிரத்னம்  கமல்ஹாசனுடன் சேர்ந்ததுதான் எனக்கு thug moment”   இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்
Advertisement

தக் லைஃப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர்கள் கமல்ஹாசன், அபிராமி, சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர். ரஹ்மான்,

ஒரு எமோஷனல் பாடலை கொடுத்தேன். அதை காதல் பாடலாக மாற்றி விட்டார் மணி ரத்னம். இவர்களுடன் சேர்ந்தது தான் எனக்கு thug moment.

சிம்பு :-

மணி மற்றும் கமல் பேசும் பொழுது நடுவில் நிற்பேன். என்னால் எதுவும் செய்ய முடியாது. கண்ணிலே பேசிக் கொள்வார்கள் இருவரும். நிறைய கற்று கொண்டேன். திரிஷா கேட்பார்கள் எதுக்கு one more எடுக்கிறார்கள் என்று. யாருக்கும் தெரியாது. கமலை பார்த்துதான் நடனம் ஆட கற்று கொண்டேன். கமல் அணிந்து இருந்த உடை அதிக எடை கொண்டது. இருந்தாலும் பயங்கரமாக நடனம் ஆடினார். விண்வெளி நாயகா பாடலை அனுப்ப சொல்லி கேட்டு கொண்டே இருக்கிறேன். அனுப்ப மாட்டார்கள். அது இன்னும் முடியவில்லை என பதில் அளிக்கிறார் ரஹ்மான்.

த்ரிஷா :-

ஆயுத எழுத்து பண்ணும் பொழுது இருந்த மணிரத்னத்திற்கும், தக் லைஃப் பன்ற மணி ரத்னத்திற்கும் எந்த மாற்றமும் இல்லை.

அசோக் செல்வன் :-

Thug life படத்தில் நடிக்க வாய்ப்பு வரும் பொழுது முதலில் நம்பவில்லை. Fan boy moment-ஐ அடக்கி வைக்க முடிய வில்லை. சிம்புவிடம் சொன்னேன் பயமாக இருக்கிறது, என்ன பன்றது என்று. கொஞ்ச கஷ்டம் தான் என்றார், கமல் அவர்கள் கண்ணை பார்க்காதே என்றார் சிம்பு. மறக்க முடியாத நிகழ்வு” என தெரிவித்தார்.

Tags :
Advertisement