பெண்ணின் 22வார கருவைக் கலைக்க அனுமதி - #MentalHealth ஐ கருத்தில் கொண்டு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பெண்ணின் மனநலனை கருத்தில் கொண்டு அவரது 22 வார கருவை கலைக்க டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கர்ப்பம் தரித்த பெண்ணின் மனநிலை மற்றும் உடல்நிலையை கவனத்தில் கொண்டு அவரது 22வார கருவை கலைக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நீதிபதி சஞ்சீவ் நருலா அமர்வு அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்படுள்ளதாவது..
"மனுதாரர் மற்றும் கருவில் இருக்கும் குழந்தை இருவருக்கும் நியாயமான சூழலைக் கருத்தில் கொண்டு, மனுதாரரின் 22வார கருவை கலைக்க அனுமதி அளிக்கிறோம். இது மனுதாரரின் மன நலனிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று நீதிமன்றம் கருதுகிறது.” என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன் பின்னர் அப்பெண் வேறொரு ஆணுடன் லிவ் இன் உறவில் வாழத் தொடங்கினார். இதன் மூலம் அவர் புதிய கர்ப்பம் தரிக்கிறார். ஆனால் தற்போதைய குடும்ப சூழல் மற்றும் ஏற்கெனவே தனி ஆளாக பெண் குழந்தையை வளர்த்து வருவது உள்ளிட்ட காரணங்களாலும், தான் அனுபவிக்கும் உடல் மற்றும் மனரீதியாக பிரச்னைகளை கருத்தில் கொண்டும் கருவை கலைக்க அப்பெண் முடிவெடுக்கிறார்.
அவரது மோசமான உடல்நிலை மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு வழிவகுத்ததால் கர்ப்பம் தரித்ததை உணரவில்லை என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் தனது கர்ப்பத்தை கலைப்பது குறித்து பல மருத்துவர்களை சந்தித்துள்ளார். இது மருத்துவக் கருவுறுதல் (MTP) சட்டத்தின் கீழ் வரம்புகளின் அனைத்து மருத்துவர்களாலும் மறுக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் ஏற்கனவே தனது ஏழு வயது மகளை பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சிரமங்களுடன் வளர்த்து வருவதால், இரண்டாவது குழந்தையை வளர்ப்பது மிகவும் சிரமம் என்றும் , தனது மனநிலை மற்றும் உடல் ஆரோக்கியம் மோசமாக இருப்பதால் 22வார கருவைக் கலைக்க அனுமதி அளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.