Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குற்றாலம் அருவிகளில் இன்று குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

09:27 AM May 26, 2024 IST | Web Editor
Advertisement

குற்றாலம் பிரதான அருவிகளில் இன்று குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனிடையே கடந்த 17ஆம் தேதி 17 வயது சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் மாநில அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

சிறுவன் உயிரிழப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சில நாட்களாக அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டியது. இருப்பினும், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு காலத்தில் சுற்றுலா பயணிகளை பாதுகாக்கும் வகையில் முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த வகையில் குற்றாலம் மெயின் அருவியின் கரை பகுதிகளில் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்ததால் அங்கு சுற்றலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 9 நாட்களுக்கு பின்பு, நேற்று இரவு 7 மணிக்கு தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவிலிருந்தே சுற்றுலா பயணிகள் அங்கு குளித்து வருகின்றனர். மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

Tags :
CourtalamMain FallsTourists
Advertisement
Next Article