For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தமிழ்நாட்டின் ரயில்வே மேம்பாட்டுக்காக ரூ.6,362 கோடி ஒதுக்கீடு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரயில்வே அமைச்சர் #AshwiniVaishnaw பதில்!

07:08 AM Aug 20, 2024 IST | Web Editor
“தமிழ்நாட்டின் ரயில்வே மேம்பாட்டுக்காக ரூ 6 362 கோடி ஒதுக்கீடு”   முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு ரயில்வே அமைச்சர்   ashwinivaishnaw பதில்
Advertisement

தமிழ்நாட்டில் ரயில்வே மேம்பாட்டுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்திற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.

Advertisement

தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்திருக்கும் நிலையில், ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு நேற்று (ஆக. 19) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பினார்.

அதில், 2024-2025 நிதியாண்டில் வழக்கமான ரயில்வே பட்ஜெட்டில், தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறிப்பிடத்தக்க அளவிற்குக் குறைந்திருப்பதால், அதன் விளைவாக தமிழ்நாட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்குப் போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தடைகளைக் கடந்து தரவுகளைச் சேகரிக்கிறோம்இந்நிலையில், அந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

“தமிழ்நாட்டில் ரயில்வே மேம்பாட்டுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகை UPA காலத்தில் செய்யப்பட்ட சராசரி ஒதுக்கீட்டை விட 7 மடங்கு அதிகம் (ஆண்டுக்கு ரூ.879 கோடி மட்டுமே). நமது அரசியலமைப்பு கட்டமைப்பில், நிலம் என்பது மாநிலப் பொருளாகும். நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் (திமுக) அரசு எங்களுக்கு ஆதரவளித்தால் மட்டுமே திட்டங்களை விரைவாக நிறைவேற்ற முடியும்.

2,749 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்ட நிலையில், இதுவரை 807 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் தலையீட்டை நாடுகிறோம். எங்கள் தரப்பில் இருந்து, நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டிற்கு இரண்டு அடி எடுத்து வைப்போம் என்று உறுதியளிக்கிறோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement