Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவைத் தேர்தலில் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் காங்கிரஸுடன் கூட்டணி - ஆம் ஆத்மி அறிவிப்பு!

05:12 PM Jan 09, 2024 IST | Web Editor
Advertisement

 5 மாநிலங்களில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க போவதாக ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. மக்களவை தேர்தலையொட்டி தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்க டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் எம்.பி முகுல் வாஸ்னிக் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

"மக்களவை தேர்தல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடரும். நாங்கள் மீண்டும் சந்திப்போம். அதன் பிறகுதான் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ஒன்றாக இணைந்து தேர்தலை எதிர்கொள்வோம். பாஜகவுக்கு தக்க பதிலடி கொடுப்போம்"என்றார்.

இதையும் படியுங்கள் : “வங்கதேசத்தில் சுதந்திரமாகவோ, நியாயமாகவோ தேர்தல் நடைபெறவில்லை” – அமெரிக்கா

தொடர்ந்து, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு ஆம் ஆத்மி கட்சி முடிவெடுத்திருப்பதாக அக்கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கோபால் ராய் பேசியதாவது;

"இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சமீபத்தில் தொடங்கியுள்ளது. டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, கோவா, குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்களில் கூட்டணியில் இணைந்து போட்டியிட முடிவு எடுத்துள்ளோம். இப்போது வரை, நேர்மறையான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

மேலும் டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. இரு மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் பிரிவுகள் ஆம் ஆத்மியுடன் இணைந்து போட்டியிடும். அடுத்த கூட்டத்தில், தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்." என்று தெரிவித்தார்.

Tags :
5 state electionsAam Aadmi PartyAAPALLIANCECongressDelhi CoordinatorGopal RoyIndia
Advertisement
Next Article