டிமான்ட்டி காலனி 3 ப்ரீ ப்ரொடக்ஷன் பணி தொடக்கம்!
டிமாண்டி காலனி-3 திரைப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணி தற்பொழுது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2015-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நீதி நடிப்பில் வெளியான படம் தான் டிமாண்டி காலனி . ஹாரர் திரில்லர் ஆக உருவாகிய இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் 2 ஆம் பாகம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. இத்திரைப்படமும் மக்களிடயே பெரும் வரவேற்பை பெற்றது.
இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர்,அருண் பாண்டியன்,முத்துக்குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன் என பலர் நடித்துள்ள இப்படத்திற்க்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.இப்படம் உலகளவில் ரூ.85 கோடி வசுலித்துள்ளது. டிமாண்டி காலனி இரண்டாம் பாகம் இறுதியிலே முன்றாம் பாகத்திற்க்கான ”லீட்” கொடுத்து இருப்பார்கள். படக்குழுவும் மூன்றாம் பாகம் இயக்கவுள்ளதாக தகவல் அறிவித்தது.
இந்நிலையில் அதன் அப்டேட்டாக படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் தற்பொழுது நடைப்பெற்று வருவதாகவும். இப்படம் ஜப்பான் உள்பட வெளிநாடுகளில் படப்பிடிப்பு மேற்கொன்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாகத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.