Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'மூடா' ஊழல் புகார்! முதலமைச்சர் #Siddaramaiah மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் அனுமதி!

12:47 PM Aug 17, 2024 IST | Web Editor
Advertisement

'மூடா' ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.

Advertisement

'மூடா' எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர அந்த மாநில ஆளுநர் அனுமதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடக மாநிலத்தில் சமீப காலமாக அரசியல் சலசலப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் வால்மீகி வாரிய நிதி முறைகேடுகளால் அமைச்சர் நாகேந்திரா பதவி இழந்திருந்தார். இப்போது மூடா முறைகேடு வழக்கு சித்தராமையா ஆட்சியை குடைய தொடங்கியுள்ளது.

அதாவது மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டுமனைகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தன்னுடைய மனைவிக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்ததற்கு இழப்பீடாகவே இந்த மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன, என்று சித்தராமையா விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியிருந்தது. இந்த விவகாரத்தை யைமப்படுத்தி சித்தராமையா ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

சட்டசபை, மேல்சபை கூட்டத்திலும் இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படி இருக்கையில், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக தொடர்ந்து அந்த மாநில ஆளுநரிடம் வலியுறுத்தி வந்தது. அதேநேரம் மைசூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஸ்னேகமயி கிருஷ்ணா என்பவர், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்திருந்தார். எனவே இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் சித்தராமையாவிடம் விளக்கம் கேட்டிருந்தார்.

இந்த சூழலை சாதகமாக்கிக்கொண்ட பாஜக, சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி மைசூர் நோக்கி பேரணியை நடத்தியது. இதனையடுத்து இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அனுமதி வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. சித்தராமையா மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அம்மாநில காங்கிரஸ், ஆட்சியை கவிழ்க்க ஆளுநர் மூலம் சதி செய்யப்படுவதாக விமர்சித்திருக்கிறது.

அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா இது குறித்து கூறியதாவது:

“கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க ஆளுநர் மூலம் சதி செய்யப்படுகிறது. ஆளுநர் தனது அரசியல் சாசன வரம்பை மீறி செயல்படுகிறார். இந்த சதி தொடர்ந்தால் உச்சநீதிமன்றம் சென்று நீதியை பெற தயங்கமாட்டோம்” என்று கூறியுள்ளார்.

Tags :
CongressGovernor Thaawarchand GehlotKarnatakaLand Scam CaseMUDA land scam caseMysuru Urban Development Authoritynews7 tamilNews7 Tamil UpdatesSiddaramaiah
Advertisement
Next Article