"துரோகிகள் அனைவரும் வெளியேறிவிட்டனர்" - பிரேமலதா விஜயகாந்த்!
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற தலைப்பில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட ராயக்கோட்டை, சூளகிரி, நெடுசாலை, வேப்பனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்கள் மற்றும் மக்களை சந்தித்தார்.
வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெடுசாலை கிராமத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், வருகின்ற ஜனவரி மாதம் முதல் தேமுதிக 2.0 ஆரம்பமாக உள்ளது. மேலும் துரோகத்தை பார்த்த இயக்கம் தேமுதிக என்றும், தற்போது துரோகிகள் அனைவரும் இங்கிருந்து வெளியேறி விட்டனர். தற்போது விசுவாசிகள் நிறைந்த இந்த கட்சி, வரக்கூடிய தேர்தலில் போட்டியிடும் இடங்களில், மகத்தான வெற்றி பெறும் என்றார். இந்த நிகழ்ச்சியில் எல்.கே.சுதீஷ் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.