இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பே - ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியீடு!
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் அனைத்து பாடல்கள் வெளியாகி உள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் சமுத்திரகனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், அண்மையில் இந்த திரைப்படத்தின் முதல் பாடலான ‘பாரா’ பாடல் வெளியாகி கலவையான வரவேற்பை பெற்றது. அதன் பின்னர், இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘நீலோற்பலம்’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படியுங்கள் : “அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் மனு மீது ஜூன் 5-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” – நீதிமன்றம் அறிவிப்பு!
இதனிடையே, இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணியளவில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, சிவராஜ் குமார், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பாகவே பாடல்கள் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ’இந்தியன் - 2’ திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போது வெளியாகியுள்ளது.