Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

09:00 PM Dec 02, 2023 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

Advertisement

குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.  இத்தொடரில் 19 நாள்களில் 15 அமர்வுகள் நடைபெறவுள்ளன. கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்கள் கொண்டுவரப்பட உள்ளன. 

இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் சுமுகமாகவும் ஆக்கபூர்வமாகவும் நடைபெறும் வகையில், பல்வேறு கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை குழுத் தலைவர்களின் கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார்.

இதையும் படியுங்கள்:  அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

அதன்படி, நாடாளுமன்ற நூலக கட்டடத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.  இதில் ஆளும் பாஜக தரப்பில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்கள் பங்கேற்றனர்.  மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3, 4 தேதிகளில் நடைபெறவிருக்கும் நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது.

Tags :
all party meetingDelhinews7 tamilNews7 Tamil UpdatesparliamentWinter Session
Advertisement
Next Article