Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

SIRக்கு எதிரான அனைத்து கட்சி கூட்டம் : மக்களை மடைமாற்றும் திசைதிருப்பு நாடகம் என நயினார் விமர்சனம்..!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் SIRக்கு எதிராக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டமானது மக்களை திசை திருப்பும் நாடகம் என்று தமிழ் நாடு பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். 
06:13 PM Nov 02, 2025 IST | Web Editor
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் SIRக்கு எதிராக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டமானது மக்களை திசை திருப்பும் நாடகம் என்று தமிழ் நாடு பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். 
Advertisement

தமிழ் நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அனைத்து கட்சிக்கூட்டத்தை கூட்டினர். அக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் மேற்கொள்ளப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாட முடிவி செய்யப்பட்டது.

Advertisement

தமிழ் நாடு பாஜக இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிலையில் அக்கட்சியின் மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டமானது மக்களை திசை திருப்பும் நாடகம் என்று விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 

”மக்கள் குறைகளைத் தீர்க்க ஒருபோதும் அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தைக் கூட்டாத முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள், தற்போது மட்டும் SIR பற்றிய கூட்டத்தை நடத்துவதில் இருந்தே தெரிகிறது இது மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு நாடகம் என்று.  ஜனநாயக தேசத்தில் குடிமக்களின் வாக்குரிமையைக் காக்கும் பொருட்டு பல்லாண்டுகாலமாகத் தொடர்ந்து நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை, ஏதோ அந்நியமானது போல, பிரதானமாகக் காட்சிப்படுத்தி, மழைவெள்ள பாதிப்பு, ஊழல், விவசாயிகள் படும் அல்லல் ஆகியவற்றை மறைத்து, குளிர்காய முயற்சிப்பது இனியும் செல்லாது

திமுகவின் திசைதிருப்பு நாடகத்தை நன்கு அறிந்து, பல கட்சிகள் கூட்டத்தினை புறக்கணித்துள்ள நிலையில், தோல்வி பயத்தில் உள்ள கட்சிகள் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.

அரசின் தொடர் திசைதிருப்பு நாடகத்தையும் வெற்று விளம்பரத்தையும் பார்த்துப் பார்த்து சலித்துப்போன தமிழக மக்கள், இந்த SIR எதிர்ப்பு நாடகத்தையும் புறக்கணிப்பர். ஜனநாயகத்தின் மீது சிறிதும் அக்கறை இருந்தால், முறையாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்ப்பதைவிடுத்து, எஞ்சியிருக்கும் நாட்களில் தங்களுக்கு வாக்களித்த மக்களின் குறைகளைத் தீருங்கள் முதல்வரே”
என்று தெரிவித்துள்ளார்.
Tags :
AllPartyMeetingCMStalinlatestNewsnainarnagaendrantnbjapTNnews
Advertisement
Next Article