For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

" ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் " - ராம்நாத் கோவிந்த் கோரிக்கை

08:27 PM Nov 20, 2023 IST | Web Editor
  ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்     ராம்நாத் கோவிந்த் கோரிக்கை
Advertisement

" ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் " என முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisement

நாட்டில் மக்களவை, மாநிலப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது குறித்த சாத்தியக்கூறை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்து கடந்த செப். 1 அன்று மத்திய அரசு உத்தரவிட்டது.

ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், சட்டத் துறைச் செயலா் நிதின் சந்திரா, சட்டம் இயற்றுதல் துறைச் செயலர் ரீட்டா வசிஷ்டா என்கே சிங், சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே மற்றும் ஊழல் ஒழிப்பு முன்னாள் ஆணையர் சஞ்சய் கோத்தாரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் கடந்த அக்டோபர்  23-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. எதிர்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுனா கார்கே இந்தக் குழுவில் இடம்பெறாதது குறித்து காங்கிரஸ் கட்சி அதிருப்தி தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்நாத் கோவிந்த் தெரிவித்ததாவது..

'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக மத்திய அரசு ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்து அதன் தலைவராக என்னை நியமித்துள்ளது.  ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக குழுவின் உறுப்பினர்களுடன் ஆலோசித்து மற்றும் மக்களின் கருத்துகளை கேட்டு அதற்கான  நடைமுறையை மீண்டும் கொண்டு வருவது தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவோம்.

தேசிய அளவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தொடர்பு கொண்டு இதுகுறித்து ஆலோசனைகளை கேட்டுள்ளேன். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு கட்டத்தில் இதற்கு ஆதரவு அளித்துள்ளன. நாட்டின் நலனுக்காக அனைத்துக் கட்சிகளும் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்' என ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement