For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்தியா மீதான பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களும் முறியடிப்பு - விங் கமாண்டர் வியோமிகா சிங்!

இந்தியா மீதான பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.
11:43 AM May 10, 2025 IST | Web Editor
இந்தியா மீதான பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா மீதான பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களும் முறியடிப்பு   விங் கமாண்டர் வியோமிகா சிங்
Advertisement

இந்தியா, பாகிஸ்தான் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் கர்னல் சோபியா குரேஷி , விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்து பேசிய சோபியா குரேஷி,

Advertisement

“தொலைதூரமாக சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகள், கனரக துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு பாகிஸ்தான் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்தியாவின் நடவடிக்கை என்பது திட்டமிட்ட குறுகிய அளவிலான பாகிஸ்தானுக்கு எதிர்வினை ஆற்றும் வகையிலான நடவடிக்கை மட்டுமே.

பாகிஸ்தான் 26 ராணுவ தளங்களை குறிவைத்த தாக்குதலை நடத்த முற்பட்டது.  குறிப்பாக பஞ்சாபில் உள்ள விமான தளத்தை குறி வைத்தே தாக்குதலை தொடங்கினர். அவர்கள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக சரியான தாக்குதலை இந்தியா கொடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா “பாலிஸ்டிக் ஏவுகணைகளை” பயன்படுத்தியது.

பாகிஸ்தான் தன்னிடமுள்ள அதிவேக ஏவுகணையை அதிகாலை 1.40 மணியளவில் இந்தியாவை நோக்கி பயன்படுத்தியது. இந்திய ஏவுகணைகள் ஆப்கானிஸ்தானின் குடியிருப்புகளை தாக்கியதாக பாகிஸ்தான் கூறுவது உண்மைக்கு புறம்பானது.

ஆப்கானிஸ்தான் மக்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும், உங்களுக்கு நினைவு படுத்த வேண்டியதும் இல்லை. ஏனெனில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது யார் என்பதை ஆப்கானிஸ்தான் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங், 

“பாகிஸ்தான் அதி கனரக ஆயுதங்களை இந்தியாவை நோக்கி பயன்படுத்தியது. பல்வேறு இடங்களில் ட்ரோன்களைக் கொண்டும் தாக்குதலை நேற்று இரவு நடத்தினர். பாகிஸ்தான் இந்தியாவில் உள்ள பொதுமக்களின் குடியிருப்புகளை குறிவைத்து தாக்குதலை நடத்துகிறது.

இந்தியாவில் உள்ள மருத்துவ நிலையங்கள், பள்ளிகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் செயல்பட்டது. பாகிஸ்தானுடைய அனைத்து தாக்குதல்களையும் முறியடித்துள்ளோம். பாகிஸ்தான் ஜம்முவில் உள்ள குடியிருப்புகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதலில் சிலர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் பதில் தாக்குதலில் பாகிஸ்தானுடைய ராணுவ தளவாடங்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக பாகிஸ்தானின் ரடார் மற்றும் ஆயுதம் சேமிப்பு கிடங்குகளை இந்தியா தாக்கி கணிசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தன்னுடைய துருப்புகளை அதிக அளவில் எல்லையை நோக்கி நகர்த்தி வருகிறது” என தெரிவித்தார்.

வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி:-

இந்தியாவின் ராணுவ முகாம்கள், விமான தளங்களை தாக்கியதாக பாகிஸ்தான் கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இந்தியாவின் பல்வேறு கட்டமைப்புகளையும், மின்சார கட்டமைப்புகளையும் தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் கூறுவது உண்மைக்கு புறம்பானது. சிர்சா விமான தளத்தை தாக்கியதாக பாகிஸ்தான் கூறியது உண்மைக்கு புறம்பானது. இந்திய ராணுவத்தின் தளவாடங்களுக்கோ அல்லது ராணுவ முகாம்களுக்கோ எந்த சேதமும் இல்லை.

இந்தியாவினுடைய ராணுவ முகாம்கள் விமான தளங்களை தாக்கியதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறி வருவது வேடிக்கையானது. ஜம்மு மற்றும் பஞ்சாபில் பொதுமக்களை நோக்கி பாகிஸ்தான் தாக்குதலை நடத்தி வருகிறது. பொதுமக்களை குறி வைத்து தாக்குவது தான் பாகிஸ்தானுடைய நோக்கமாக உள்ளது. பாகிஸ்தானின் செயல்பாடுகளால் தான் இந்த ராணுவ நடவடிக்கை என்பது எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

Tags :
Advertisement