“இந்தியா கூட்டணி 300 இடங்களில் வெற்றி பெறும்” - ஆர்எஸ் பாரதி பேச்சு!
“நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 300 இடங்களில் வெற்றி பெறும்” என திமிக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
திருவெற்றியூரில் திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை
முன்னிட்டு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர். ஏழை எளியோருக்கு தையல் இயந்திரம், மாணவர்களுக்கு லேப்டாப் உள்ளிட்ட ஆயிரம் பெண்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி மற்றும் வட சென்னை
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம்
சுதர்சனம், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கேபி சங்கர், மாநகராட்சி மண்டல
குழுத்தலைவர் திமு தனியரசு, அரசு கொறடா கோவி செழியன் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய ஆர்எஸ் பாரதி, “ பாஜக வரலாறு தெரியாமல் பேசுகிறது. 1962-ல் திமுக 50 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக வளர்ந்து விடும் என்ற நோக்கத்தில் அன்றே மத்திய அரசு தடை சட்டத்தை கொண்டு வந்தது. 153 ஏ என்ற பிரிவை சேர்த்து, 7 வருடம் தண்டனைக் கொடுத்து திமுகவிற்காகவே சட்டத்தை திருத்தினார்கள். அந்த தடையும் மீறி வளர்ந்த இயக்கம் திமுக என்றும் மோடி மறந்துவிடக்கூடாது.
பாஜகவின் அன்றைய பெயர் ஜன சங்கம். அவர்கள் சின்னம் அகல் விளக்கு. எமர்ஜென்சி
நேரத்தில் பயந்து கட்சியை கலைத்து ஓடிய கும்பல் பாஜக. எம்ஜிஆர் கட்சி
ஆரம்பிக்கும்போது அண்ணா திமுக என்று ஆரம்பித்தார். எமர்ஜென்சி நேரத்தில் அனைத்து இந்திய அண்ணா திமுக என்று மாற்றினார். ஆனால் சிகப்பு கொடியையும், திமுக என்ற பெயரையும் மாற்ற மாட்டேன் என்று சொன்னவர் கலைஞர் கருணாநிதி.
இந்தியா கூட்டணி 300 இடங்களில் கண்டிப்பாக வெற்றி பெறும். உழைத்தவர்களுக்கு எல்லாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்று 10 ஆண்டுகாலம் எதிர்க்கட்சியாக இருந்து கஷ்டப்பட்டார்கள் திமுகவினர். அறிவிக்கும் போராட்டத்தில் எல்லாம் பங்கேற்றார்கள். உழைத்தார்கள்.