Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அகில இந்திய ஹாக்கி போட்டி - போபால், புவனேஸ்வர், நியூ டெல்லி, பெங்களூரு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி!

07:18 AM May 31, 2024 IST | Web Editor
Advertisement

கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியில் போபால், புவனேஸ்வர், நியூ டெல்லி, பெங்களூரு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.  

Advertisement

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி
ஹாக்கி மைதானத்தில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பை சார்பில் அகில இந்திய
ஹாக்கி போட்டி மே 24ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  16 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில்,  அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற்று வந்தது.  இதனையடுத்து புள்ளிகளின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் 2 அணிகள் என 8 அணிகள் காலியிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

அதன்படி நேற்று நடைபெற்ற முதல் காலிறுதி போட்டியில் போபால், நேஷனல் சென்டர்
ஆஃப் எக்ஸலன்ஸ் அணியும் - சென்னை, இந்தியன் பேங்க் அணியும் மோதின.  இதில் 4:1 என்ற கோல் கணக்கில் போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி
வெற்றிப் பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.  தொடர்ந்து 2வது காலிறுதி போட்டியில் புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணியும் - சென்னை,  இன்கம் டேக்ஸ் அணியும் மோதின.

இதில் 4:3 என்ற கோல் கணக்கில் புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணி வெற்றிப் பெற்று
அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.  இதனையடுத்து நடைபெற்ற 3வது காலிறுதி போட்டியில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணியும் மோதின.  இதில் 4:2 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி,  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி வெற்றிப் பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

மேலும், 4வது காலிறுதி போட்டியில் பெங்களூரு, கனரா பேங்க் அணியும் - சென்னை,
அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணியும் மோதின.  இதில் 1:0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு, கனரா பேங்க் அணி வெற்றிப் பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

தொடர்ந்து, நாளை அரையிறுதி போட்டிகள் நடைபெறுகிறது.  முதலாவது அரையிறுதி போட்டியில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும் - போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணியும் மோதுகின்றன.  இரண்டாவது அரையிறுதி போட்டியில் பெங்களூரு, கனரா பேங்க் அணியும் - புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணியும் மோதுகின்றன.

Tags :
hockeyIndia Hockey Tournamentkovilpatti
Advertisement
Next Article