Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இஸ்ரேலுக்கு கூகுள் உதவி செய்வதாக குற்றச்சாட்டு - பணியாளர்கள் போராட்டம்.!

07:13 PM Dec 16, 2023 IST | Web Editor
Advertisement

இஸ்ரேலுக்கு ராணுவத்திற்கு கூகுள் உதவி செய்வதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதன் பணியாளர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இஸ்ரேல் - காஸா  இடையே கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய போரானது இதுவரையிலும் தொடர்ந்து வருகிறது.  இஸ்ரேல், காஸா மீது தொடர் தாக்குதல்களை நடத்தி 18,000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.  இத்தாக்குதல்களில் மருத்துவமனைகளும் குறிவைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.  அதற்கு பதிலளித்த இஸ்ரேல்,  காஸா மருத்துவனைகளை பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தி வருவதாக கூறியது.

இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகளின் செயல்பாடுகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கூகுள் நிறுவனம், இஸ்ரேல் அரசு மற்றும் ராணுவத்தோடு இணைந்துள்ள புதிய திட்டமான ப்ராஜக்ட் நிம்பூஸ் (Project Nimbus)-ஐ ரத்து செய்யக் கோரி கூகுள் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேல் இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தொழில்நுட்ப வசதிகளைப் போரில் பயன்படுத்தி பாலஸ்தீனர்களை கொல்வதாகப் போராட்டக்காரகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் கூகுள் அலுவலகத்திற்கு முன்னால் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். 'இனப் படுகொலைக்கு துணை நிற்காதே' 'இனப்படுகொலையால் லாபம் ஈட்டாதே' என்பது போன்ற வாசகங்களை அடங்கிய பலகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேல் ராணுவத்திற்கு க்ளவுட் வசதிகளை (cloud services) அளிக்க கூகுள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சக்திவாய்ந்த கணினி வளங்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்ல முடியாததால் கூகுளின் தகவல்கள் மற்றும் கணினி வளங்களை க்ளவுட் வசதிகள் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.

ஏற்கனவே இஸ்ரேல் ராணுவம் புதிய  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை போரில் பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள நிலையில் கூகுளை இந்தத் திட்டத்திலிருந்து விலகுமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags :
AmericaArmygoogleIsrael Palestine WarIsrealPalestinePalestine WarProtest
Advertisement
Next Article