அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - செந்தில் தொண்டமான், வி.கே.சசிகலா காளைகள் வெற்றி!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் வி.கே.சசிகலா ஆகியோரின் காளைகள் வெற்றி பெற்றுள்ளன.
பொங்கல் பண்டிகையொட்டி மதுரை மாவட்டத்தில் 3 வது ஜல்லிக்கட்டாக அலங்கால்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 6:00 மணி முதல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான மாடுபிடி வீரர்களின் மருத்துவ பரிசோதனை துவங்கியது.
இந்த மருத்துவ பரிசோதனையில் மாடுபிடி வீரர்களை 130 மேற்பட்ட மருத்துவ குழுவினர் மருத்துவர் செவிலியர் உதவியாளர் என அனைவரும் பரிசோதனை செய்தனர்.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆன்லைன் மூலமாக 1784 பதிவுற்ற நிலையில் அதில் ஆன்லைன் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 800 மாடுபிடி வீரர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவருமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டனர்.
இதில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கு முதல் பரிசு கார், பைக் மற்றும் பீரோ, கட்டில் டிவி, சைக்கிள், தங்க காசு போன்ற பரிசுகள் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா குழுவினரால் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளருக்கு வழங்கப்படும்.
இரண்டாம் சுற்று முடிவில் சிவகங்கையைச் சேர்ந்த அபிசித்தர் 8 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார். மேலும் பல பிரபலங்களில் காளைகளும் வெற்றி பெற்றுள்ளன.
பிரபலங்களின் காளை :
- இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டைமான் 3 காளைகளும் வெற்றி பெற்றன
- வி.கே.சசிகலா பெயரில் அவிழ்க்கப்பட்ட காளையும் வெற்றி பெற்றது