அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு | விறுவிறுப்பாக நடைபெறும் இறுதிச் சுற்று!
தமிழர்களின் பாரம்பரியம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைத்திருநாளில் நடைபெறுவது வழக்கம். அதிலும், குறிப்பாக மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெறும். நேற்று முன்தினம் (ஜன.14) அவனியாபுரத்திலும், நேற்று (ஜன. 15) பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில், மதுரை அலங்காநல்லூரில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன. 16) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியினை இன்று காலை 7 மணியளவில் போட்டியை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, அலங்காநல்லூர் கோயில் காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன.இதுவரை 8 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. 8வது சுற்றில் 6 வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இறுதிச் சுற்றுக்கு இதுவரை இறுதி சுற்றுக்கு 40 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 9 வது சுற்று இறுதி சுற்றாக அறிவிக்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.