For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 5வது சுற்றில் 6 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 5 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் அதன் விவரங்களைக் காணலாம்.
02:17 PM Jan 16, 2025 IST | Web Editor
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு   5வது சுற்றில் 6 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி
Advertisement

தமிழர்களின் பாரம்பரியம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைத்திருநாளில் நடைபெறுவது வழக்கம். அதிலும், குறிப்பாக மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெறும். நேற்று முன்தினம் (ஜன.14) அவனியாபுரத்திலும், நேற்று (ஜன. 15) பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

Advertisement

இந்த நிலையில், மதுரை அலங்காநல்லூரில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன. 16) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியினை இன்று காலை 7 மணியளவில் போட்டியை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஶ்ரீதர்                              தண்டீஸ்வரன்                              கரைமுருகன்

இதைத் தொடர்ந்து, அலங்காநல்லூர் கோயில் காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன. இதுவரை 5 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. ஐந்து சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மாடுபிடி வீரர்கள் 10 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 8 பேர், பார்வையாளர்கள் 7 பேர் என இதுவரை மொத்தமாக 25 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 9 பேர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

5ம் சுற்று முடிவில்:

களம் கண்ட காளைகள் : 92

பிடிபட்ட காளைகள் : 29
(மொத்தம்: 113)

சந்தோஷ்                             அழகுராஜா                                                பிரவீன்

இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற வீரர்கள் : 6 பேர்

ஶ்ரீதர், பொதும்பு (P 227) - 5 காளைகள்

தண்டீஸ்வரன், சிவகங்கை (P 220) - 4 காளைகள்

கரைமுருகன், நெடுங்குளம் (P 246) - 4 காளைகள்

சந்தோஷ், சோழவந்தான் (P 247) - 4 காளைகள்

அழகுராஜா, சோழவந்தான் (P 216) - 3 காளைகள்

பிரவீன், கூலப்பாண்டி (P 238) - 2 காளைகள்

தொடர்ந்து 6வது சுற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisement