எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் அகிலேஷ் யாதவ்!
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கார்ஹல் தொகுதி எம்எல்ஏவாக இருந்த அகிலேஷ் யாதவ் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணியில் அங்கம் வகித்தது. மக்களவைத் தேர்தலில் 37 இடங்களைப் பெற்று சமாஜ்வாதி கட்சி மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சட்டமன்ற உறுப்பினர் பதிவியை இன்று ராஜிநாமா செய்துள்ளார். இதனால், அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேசம் மாநிலம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இழந்துள்ளார். புதிய எதிர்க்கட்சி தலைவர் விரைவில் அகிலேஷ் யாதவ் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : அனுமதி பெறாமல் செயல்பட்ட திருமண மஹால் – உரிய விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அகிலேஷ் யாதவ் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக வெற்றி பெற்றார். மக்களவை தேர்தலில் 37 உறுப்பினர்களைக் கொண்ட மூன்றாவது பெரிய கட்சியாக சமாஜ் கட்சி உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் மக்களவை குழு தலைவராக அகிலேஷ் யாதவ் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.