Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘அகண்டா 2’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு..!

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் ‘அகண்டா 2’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
09:20 PM Oct 24, 2025 IST | Web Editor
நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் ‘அகண்டா 2’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
Advertisement

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான அகண்டா திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. போயபதி சீனு இயக்கிய இப்படத்தில் பிரக்யா ஜைஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா உள்ளிட்டோர் நடித்து இருந்தார்கள்.

Advertisement

அகண்டா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின்  2-ம் பாகம் உருவாகி வருகிறது. முதல்பாகத்தை  இயக்கிய போயபதி சீனு இப்படத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே இந்த பாகத்திலும் நடிக்கும் நிலையில் கூடுதலாக சம்யுக்தா மேனன், ஆதி பினிசெட்டி ஆகியோரும் படத்தில் இணைந்துள்ளனர். மேலும் அகண்டா 2 ஆம் பாகத்துக்கும் தமனே இசையமைக்கிறார்.

இந்நிலையில் ‘அகண்டா 2’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Tags :
actorBalakrishnaAkhanda 2Akhanda 2glimpsCinemaUpdatelatestNews
Advertisement
Next Article