Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தீபாவளிக்கு அஜித்தின் ‘விடாமுயற்சி’? வெளியான புதிய தகவல்!

04:53 PM Jun 19, 2024 IST | Web Editor
Advertisement

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும்  ‘விடாமுயற்சி’  திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்  ‘விடாமுயற்சி’.  இந்த படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’  திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித்குமார்.  விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது.

இந்த படப்பிடிப்பின் போது அஜித்தும்,  ஆரவ்வும் விபத்தில் சிக்கி உயிர்பிழைத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.  முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இந்தப் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனையடுத்து இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனவும்,  இன்னும் 20-30% படப்பிடிப்பே மீதமுள்ளது எனவும் இந்த படத்தில் நடித்து வரும் நடிகர் அர்ஜூன் தெரிவித்தார்.

இதனையடுத்து விடாமுயற்சி படப்பிடிப்புக்காக மீண்டும் அஜர்பைஜான் செல்வதற்கு முன், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.  இந்த நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா,  விடாமுயற்சி திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.  இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

Tags :
ajith kumarak62DiwaliMagizh ThirumeniVidaaMuyarchi
Advertisement
Next Article