வெள்ளிவிழா ஆண்டில் ரீ-ரிலிஸாகும் அஜித்தின் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’!
சமீப காலமாகவே ரீ-ரிலிஸ் முறை கலாச்சாரம் தமிழ் சினிமாவில் பெருகி வருகிறது. கடைசியாக அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் வீரம் திரைப்படம் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது. இதனிடையே அவரின் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ரீ - ரிலிஸ் செய்யப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதுதொடர்பான அறிவிப்பு ஒன்றையும் இன்று வெளியிட்டார். அதன்படி வெள்ளிவிழா ஆண்டான இந்த ஆண்டிலேயே படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
ராஜிவ் மேனன் இயக்கத்தில் அஜித், மம்மூட்டி, தபு, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2000ஆம் ஆண்டு மே- 5 ல் வெளியானது ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படம். பாடல், நடிப்பு என படம் அனைவரையும் கவர்ந்தது. வசூல் ரிதியாகவும் வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படம் தேசிய திரைப்பட விருதையும், இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் வென்றது. மேலும் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இடம்பெற்றது. தெலுங்கிலும் திரையிடப்பட்டது.