For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘ #AjithKumarRacing ’ - நடிகர் அஜித்தின் கார் ரேஸிங் அணி மற்றும் லோகோ வெளியீடு!

12:48 PM Oct 22, 2024 IST | Web Editor
‘  ajithkumarracing ’   நடிகர் அஜித்தின் கார் ரேஸிங் அணி மற்றும் லோகோ வெளியீடு
Advertisement

கார் ரேஸிங்கில் களமிறங்கும் நடிகர் அஜித்தின் அணியின் லோகோ வெளியானது.

Advertisement

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் நடிகர் அஜித்குமார், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரனின் ‘குட் பேட் அக்லி’ என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களின் வேலைகளும் இறுதிக்கட்டத்தில் இருந்துவருவதால், தற்போது அஜித் குமார் தன்னுடைய பேஷனான கார் பந்தயத்தின் பக்கம் திரும்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிப்பு மட்டும் அல்லாமல் கார் மற்றும் பைக் ரேசிங்கில் மிகப்பெரிய அளவில் ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித்குமார் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். பைக்கை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் அவருக்கு பிடித்த இடத்திற்கு செல்லும் பழக்கமுடையவர். அண்மையில், நடிகர் அஜித் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ரேஸ் டிராக்கில் களம் இறங்கப் போகிறார் என தகவல் வெளியானது.

தி ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா சார்பில் அஜித் 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்க யுரோப்பியன் ஜிடி4 சாம்பியன்ஷிப் ரேஸிங் ஈவண்டில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியானது. இதனிடையே, 'அஜித் குமார் ரேஸிங்' என்ற புதிய கார் பந்தய அணியை நடிகர் அஜித்குமார் தொடங்கியுள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்த்ரா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : Delhi | ரயிலில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் கிடந்த பூரான்! அதிர்ச்சி அடைந்த பயணிகள்!

ஐரோப்பாவில் நடைபெறும் 24H கார் பந்தயத்தில் போர்ஷே 99 GT3 கப் பிரிவில் 'அஜித்குமார் ரேஸிங்' அணி பங்கேற்கும் என அவர் தெரிவித்தார். இந்நிலையில், தற்போது நடிகர் அஜித்தின் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியின் லோகோ வெளியானது. அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் மேலும் 3 கார் ரேஸர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

நடிகர் அஜித் இதற்குமுன் நடந்த தேசிய மோட்டார்சைக்கிள் ரேஸிங் சாம்பியன்ஷிப் மற்றும் பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப், ஆசிய ஃபார்முலா BMW சாம்பியன்ஷிப் ஆகிய ரேஸிங் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement