For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விண்டேஜ் லுக்கில் அஜித், த்ரிஷா - வைரலாகும் விடாமுயற்சி போஸ்டர்!

08:34 PM Jul 19, 2024 IST | Web Editor
விண்டேஜ் லுக்கில் அஜித்  த்ரிஷா   வைரலாகும் விடாமுயற்சி போஸ்டர்
Advertisement

நடிகர் அஜித், த்ரிஷாவுடன் இருக்கும் புதிய போஸ்டர் ஒன்றை விடாமுயற்சி படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’.  இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடிக்கும் ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மங்காத்தா படத்தை தொடர்ந்து நடிகர் அர்ஜுன் இந்த படத்தில் நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.  இப்படத்தினை வரும் தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அஜித் மற்றும் த்ரிஷா இணைந்திருக்கும் காட்சி அமைந்துள்ளது. அஜித் இளமையான தோற்றத்தில் இருக்கும் இப்போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement