"அஜித், ரஜினி, நயன்தாராவிற்கு இதை விட கூட்டம் வரும்" - விஜயை விமர்சனம் செய்த சீமான்!
கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "கிரிக்கெட் வீரருக்கு தரும் மரியாதையை சிதம்பரனார், பாரதி ஆகியோருக்கு தரவில்லை. இளையராஜாவை இசை இறைவனாக பார்க்கிறோம். அவர் பெயரில் விருது வழங்குவது பெருமைதான். இளையராஜாக்கு எம்பி சீட்டு - எனது அப்பாவிற்கு திராவிட கட்சிகள் இதுவரை என்ன செய்தீர்கள். தற்போது பாஜக எம்பி சீட்டு வழங்குகிறது.
விஜய் மாநாடு கூட்டம் திரண்டு உள்ளது, நீங்கள் அதனை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, "அஜித், ரஜினி, நயன்தாராவிற்கு இதை விட கூட்டம் வரும். இது போன்றவர்களால் தான் நாடு நாசமாகி உள்ளது. மக்களுக்காக பாடுபடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான். முதலில் மலைகளின் மாநாடு நடத்த உள்ளோம். நம் இயற்கையை அழிக்கிறார்கள், பூமி அழிகிறது. இலங்கை, நேபாள் ஆகிய இடங்களில் வந்தது உங்களுக்கு வராதா?
ஸ்டீபன் ஹாகிங் கூட பூமி அழியப்படுவதை குறிப்பிட்டுள்ளார். நீங்கள் காசை சேர்த்து வைக்க பார்க்கிறீர்கள், நான் சுவாசத்தை சேர்த்து வைக்க கூறுகிறேன். என் தாயின் மார்பு போன்று பூமி தாயின் மார்பு மலை. பெற்றோர்கள் இல்லாத குழந்தைக்கு மாதம் 2000. குடிக்க வைத்து கொன்றதால் பெற்றோர் இல்லாமல் போனார்கள்.
விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது குறித்த கேள்விக்கு, நீதிமன்றம் எதையும் கூறவில்லை. நீங்களாக எதையும் பேசாதீர்கள். பல்வேறு மனுக்கள் வாங்கினால் ஒரு லட்சம் பிரச்சனைகளை நாட்டு மக்களுக்கு கொடுத்துள்ளீர்களா இல்லையா? காவிரி நதி நீர், மருத்துவ உரிமை, மாநில உரிமையை பறித்தது காங்கிரஸ் அதனை வளர்த்தது பாஜக.
சாராய கடைகள் மூடுவேன் என்று இந்த அரசால் கூற முடியுமா? காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுகவை தாண்டி நாட்டிற்கு பாதிப்பு வந்துள்ளதா? இவர்களுடன் நான் கூட்டணி வைக்க வேண்டுமா? மூன்றாவது உலக போரை செய்தவர் பிரபாகரன். இனி வந்தால் அது நான்காவது உலக போர். என்னைவிட அதிகாரத்தில் உள்ளவர்கள் யார்? நீங்கள் ஓட்டுபோட்டால் நான் அதிகாரத்திற்கு வருவேன். அதிகாரத்திற்கு வந்தவன் தீமை செய்கிறான், நான் நன்மை செய்வேன்.
மணிப்பூர் பற்றி எரியும் போது பிரதமர் மோடி செல்லவில்லை. இன்று அங்கு போராட்டம் இல்லை செல்கிறார் ஆப்ரேசன் சிந்தூர் போன்று ஆப்ரேசன் இந்தூர் என்று ஒன்று போடவேண்டியது தானே. விமான நிலையத்தை விரிவாக்கம் செய்கிறார்கள் பிறகு பசிக்கிறது என்று விவசாயம் செய்ய விமான நிலையத்தை இடிக்க முடியுமா? 2026ல் என் கையில் தான் ஆட்டம் உள்ளது. விஜயிடம் இவ்வளவு நேரம் கேள்வி கேட்க முடியுமா? விஜய் செய்தியாளர் சந்திப்பு நடத்தவில்லை. ஆனால் நேராக கோட்டைக்கு செல்ல நினைக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.