ஆசிய லீ மான்ஸ் தொடருக்கான ரேஸ் காரை அறிமுகம் செய்த அஜித்..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான குட் பேட் அக்லி படம் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித் குமார் நடிப்பு மட்டுமின்றி ரேஸிங்கிலும் ஆர்வம் கொண்டவர். சொந்தமாக ரேஸிங் பந்தய நிறுவனத்தையும் அவர் உருவாக்கியுள்ளார்.
இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
இந்த நிலையில் வரும் ஆசிய லீ மான்ஸ் தொடரில் அஜித்குமார் ரேஸிங் அணி கலந்து கொள்ளவுள்ளது. மேலும் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயனும் இந்த தொடரில் கலந்துகொள்கிறார்.
இதனை தொடர்ந்து ஆசிய லீ மான்ஸ் தொடரில் அஜித்குமார் ரேஸிங் அணி பயன்படுத்தும் LMP3 எனும் ரேஸ் காரை அஜித்குமார் அறிமுகம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்களை அஜித்குமார் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.