அஜித் குமார் ரேஸிங் வெற்றி : ரசிகர்கள் கொண்டாட்டம்!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் சினிமா மட்டுமின்றி, கார், பைக் ரேஸிங்கில் மிகுந்த ஆர்வமிக்கவர் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது துபாயில் கார் ரேஸ் நடைபெற்று வரும் நிலையில் இதில் அஜித்குமார் கலந்து கொண்டார். சோதனை ஓட்டத்தின் போது கார் தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அஜித்துக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற 24ஹெச் கார் ரேஸ் 991 பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி கலந்து கொண்டு 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்திய அணி சர்வதேச போட்டியில் வென்றிருப்பது அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித்குமாருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் மாதவன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் தவெக சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கார் ரேஸில் அஜித் குமார் 3ஆவது இடம் பிடித்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.