வைப்-ல் அஜித் ரசிகர்கள்... வெளியானது விடாமுயற்சியின் ‘சவதீகா’ பாடல்!
அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் ‘சவதீகா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் அஜித் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித் உடன் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ், நிகில் நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிரூத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தத் திரைப்படம் பொங்கலையொட்டி அடுத்த மாதம் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான Sawadeeka (சவதீகா) என்ற பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாலிவுட்டின் சூப்பர் ஹிட்டான பிரேக் டவுன் என்ற படத்தை தழுவி விடாமுயற்சி உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.