For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#GoodBadUgly | மாஸ் லுக்கில் அஜித், அர்ஜூன் தாஸ்... வைரலாகும் புகைப்படங்கள்!

09:26 PM Oct 26, 2024 IST | Web Editor
 goodbadugly   மாஸ் லுக்கில் அஜித்  அர்ஜூன் தாஸ்    வைரலாகும் புகைப்படங்கள்
Advertisement

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் நடிகர்கள் அஜித்குமார், அர்ஜூன் தாஸ் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

‘விடாமுயற்சியை’ தொடர்ந்து நடிகர் அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு தற்போது வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

இப்படத்தில் நடிகை த்ரிஷா நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதுகுறித்து படக்குழு எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. இதனையடுத்து சமீபத்தில் இப்படத்தில் இணைந்தது குறித்து நடிகர் அர்ஜூன் தாஸ் கூறியிருந்தார். இந்நிலையில் இப்படத்தின் அஜித்தின் புதிய தோற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

இந்நிலையில், ஸ்பெயினில் நடைபெற்று வரும் படப்பிடிப்பின்போது ரசிகர் ஒருவர் அர்ஜூன் தாஸுடனும், நடிகர் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement