Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தும் அதை சொன்னார்.." - நடிகை பகிர்ந்த சுவாரஷ்ய தகவல்!

நடிகை சவுமியா பாரதி, அஜித்குமார் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.
08:10 AM Feb 10, 2025 IST | Web Editor
Advertisement

கடந்த 1990 ம் ஆண்டு ‘என் வீடு என் கணவர்’ என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் அஜித்.  இப்படத்தில் அவர் பள்ளி மாணவராக நடித்திருந்தார்.  பின்னர் 1993 ல் வெளியான அமராவதி திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமானார்.  இதனையடுத்து காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, வலிமை என பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

Advertisement

இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். இவர் துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த இப்படம் கடந்த 6ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், 'சவதீகா' பாடலில் நடனமாடிய நடிகை சவுமியா பாரதி, அஜித் குறித்து சில சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "விடாமுயற்சி படப்பிடிப்பின்போது ஒருநாள் நடிகர் அஜித், 'கடவுளே' எனக் கூறியபடி களைப்பாக வந்து இருக்கையில் அமர்ந்துவிட்டு, என்னை பார்த்து காமெடியாக 'அஜித்தே' எனக் கூறி சிரித்தார். அவரின் நகைச்சுவை உணர்வு மிகவும் அற்புதமானது" என தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article