சிவகங்கை | ஐயப்பன் கோயில் மண்டல பூஜை கோலாகலம் - ஏராளமானோர் பங்கேற்பு!
சிவகங்கை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது காசி விஸ்வநாதர் கோயில்.
இக்கோயிலில் ஐயப்ப சுவாமிக்கு மண்டல பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக சிவகங்கை ராணி சாகிபா மதுராந்தகி நாச்சியார் மண்டல பூஜையை துவக்கி வைத்து சாமி தரிசனம் செய்தார். மண்டல பூஜையை முன்னிட்டு நாள்தோறும் ஐயப்ப
சுவாமிக்கு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் நிறைவுவிழாவான நேற்று (டிச-26) ஐயப்பன் உற்சவர் தேரில் அலங்கரிக்கப்பட்டு தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்டியளித்தார். அதில் கேரள ஜண்டே மேளம் முழங்க, பலரும் கதகளி, காளிகள் என பலவிதமான சுவாமி வேடமிட்டு ஊர்வலம் வந்தனர். இந்த ஊர்வலத்தில் மயிலாட்டம், சிலம்பாட்டம், கதகளி, ஆடினர். இதனை பக்தர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். வெகு விமரிசையாக நடைபெற்ற மண்டல பூஜை விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.